கடந்த சில நாட்களாக நாட்டில் தங்கத்தின் விலையானது அதிகரிப்பை பதிவு செய்து வரும் நிலையில், இன்றையதினம் (23) தங்கத்தின் விலை சடுதியான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 824,251 ரூபாவாக காணப்படுகின்றது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின் (24 karat gold 1 grams) விலை 29,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுண்
அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்று 232,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராமின்(22 karat gold 1 grams) விலையானது 26,660 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்று 213,300 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 21 கரட் தங்கம் ஒரு கிராமின்(21 karat gold 1 grams) விலையானது 25,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம்
அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 216,500 ரூபாவாக உள்ளது.
22 கரட் தங்கம் ஒரு பவுணானது 200,200 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,751.82 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.