முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அபிவிருத்திக் குழுவால் கட்டளையிடப்பட்டும் முன்னெடுக்காத நடவடிக்கை

மட்டக்களப்பு – அட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயம் பராமரித்துவந்த காணியை, மாநகரசபையினர் தனியார் ஒருவருக்கு மீன் வாடி அமைக்க
முறைகேடாக வழங்கிய விவகாரம் தொடர்பில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மீன்வாடியை அங்கிருந்து அகற்றுமாறு கடந்த மாதம் மாவட்ட
அபிவிருத்திக் குழு, மற்றும் மனித உரிமை ஆணையம் கட்டளையிட்டும் குறித்த நபர் அங்கிருந்து
வெளியேறாமல் உள்ளதாக பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பார்வீதியில் செழியன் பூங்காவிற்கு அருகில் கடற்கரை பகுதியில் பிரதேச
செயலகத்திற்கு உட்பட்ட காணியை மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதாதேவி ஆலய நிர்வாகம் 50
வருடத்துக்கு மேலாக சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் காணி அபகரிப்பில் இருந்து
பாதுகாத்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

உற்சவ காலம்

ஆலய உற்சவ காலங்களில் புனித மஞ்சள் நீராடுதலும் கும்பஞ் சொரிதல்
போன்ற புனித காரியங்களுக்காக நிலத்தை மக்கள் பயன்படுத்தி வந்ததுடன் அங்கு வேல் நாட்டப்பட்டு
அம்மன் பீடம் அமைக்கப்பட்டு வழிபட்டுவந்துள்ளனர்.

அபிவிருத்திக் குழுவால் கட்டளையிடப்பட்டும் முன்னெடுக்காத நடவடிக்கை | Unprecedented Action Despite Being Ordered

இந்தநிலையில் குறித்த காணியை கடந்தவருடம் 2024 ஆம் ஆண்டு மாநகர
ஆணையாளர் “அந்த காணி மாநகரசபைக்கு உட்பட்டது” என போலியான ஆவணங்களை தயாரித்து கிராமசேவகரிடமோ, பொது
அமைப்புகளிடமே, கிராம மக்களிடமே கேட்டறியாது தனியார் ஒருவருக்கு
மீன்வாடி அமைக்க குத்தகைக்கு வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆலய நிர்வாகம் மனித உரிமை ஆணைக்குழு முறைபாட்டையடுத்து அவர்கள்
மேற்கொண்ட விசாரணையில் பிரதேநச செயலக்தின் கீழ் உள்ள அரச காணியை மாநகரசபையினர்
முறைகேடாக குத்ததைக்கு வழங்கியுள்ளதுடன் மீன்வாடியை அங்கிருந்து அகற்றுமாறு
தெரிவித்திருந்தனர்

இருந்தபோதும் இந்த தீர்மானங்கள் தொடர்பில் மீன்வாடியை
அகற்றும் செயற்பாட்டை இன்றுவரை எவரும் மேற்கொள்ளாது உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.