முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எம்.பி இளங்குமரன் சுண்டிகளம் கடற்கரை பகுதிக்கு உழவு இயந்திரத்தில் விஜயம்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்(Ilankumaran), சுண்டிக்குளம் கல்லாறு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சுண்டிக்குளம் பேப்பாரப்பிட்டி பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடுவோர், சுண்டிகுளம் சந்தி தொடக்கம் கடற்கரை பேப்பாராப்பிட்டி வரை செல்லும் பிரதான வீதியை முற்று முழுதாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

இதன் காரணமாக, இந்த வீதியை பயன்படுத்தும் ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத தொழில்

சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் கடற்றொழிலில் ஈடுபடும் சுமார் 1500இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தமது கடற்றொழிலை இழந்துள்ளனர்.

மேலும், தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியாத நிலையில் தற்போது சட்டவிரோத தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக நமது கடல் தொழில் முற்று முழுதாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எம்.பி இளங்குமரன் சுண்டிகளம் கடற்கரை பகுதிக்கு உழவு இயந்திரத்தில் விஜயம் | Mp Ilankumaran Visits Beach On Tractor

உழவு இயந்திரத்தில் சுண்டிக்குளம் கல்லாறு மக்கள் கடலில் பிடிக்கின்ற மீனை உரிய நேரத்தில் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலையில் இந்த வீதி காணப்படுகின்றது.

இதன் காரணமாக தாம் கடலில் பிடிக்கின்ற மீனை பாதி விலைக்கு வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறந்த வாழ்வாதாரம்

இந்த வீதி புனரமைக்கப்படுமாயின்  மக்கள் பல பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு உரிய நேரத்தில் மீன்களை கொண்டு செல்லவும் சிறந்த வாழ்வாதாரத்தை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

எம்.பி இளங்குமரன் சுண்டிகளம் கடற்கரை பகுதிக்கு உழவு இயந்திரத்தில் விஜயம் | Mp Ilankumaran Visits Beach On Tractor

இதேவேளை, இந்த வீதி பாரியளவில் சேதமடைந்து காணப்படுவதன் காரணமாக பொது போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுகின்றது.

இதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் அவசர தேவை கருதி வைத்தியசாலை செல்வோர் மிக அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இளங்குமரன் கருத்து தெரிவிக்கையில்,
இந்த வீதி இந்த வருட இறுதிக்குள் முழுமையாக புணரமைக்கப்படும் எனவும், தற்பொழுது மக்கள் பயன்பாட்டுக்காக தற்காலிகமாக வீதியின் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஓரளவு புனரமைப்பு செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.