மிருணாள் தாகூர்
சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை மிருணாள் தாகூர். இதை தொடர்ந்து தெலுங்கில் வெளிவந்த Hi நானா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
தென்னிந்திய சினிமாவை விட பாலிவுட் திரையுலகில்தான் நடிகை மிருணாள் தாகூருக்கு அதிக பட வாய்ப்புகள் வருகிறது. படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த பல நட்சத்திரங்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் சீரியல்களில் நடித்து அதன்பின் வெள்ளித்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மிருணாள் தாகூர்.
பவித்ராவின் பிறந்தநாளை கொண்டாடிய பிக் பாஸ் பிரபலங்கள்.. வீடியோ இதோ
வைரல் வீடியோ
இந்த நிலையில், Mujhse Kuchh Kehti…Yeh Khamoshiyaan எனும் ஹிந்தி சீரியலில் நடிகை மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்திருந்த போது எப்படி இருந்துள்ளார் என்பது குறித்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
#MrunalThakur in red ❤️🤌 pic.twitter.com/UKV2c0SgBy
— y. (@yaaro__oruvan) January 30, 2025