விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துவிட்டார். இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, கவுதம் மேனன், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இயக்குநர் கவுதம் மேனன் லியோ படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக விஜய்யுடன் ஜனநாயகன் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.
என்ன பத்தி தப்பா பேசுறத யாரும் நம்பாதீங்க.. கவிப்பேரரசு வைரமுத்து Breaking Interview
யோஹன் அத்தியாயம் ஒன்று
ஒரு நடிகராக விஜய்யுடன் இவர் கைகோர்த்திருந்தாலும், விஜய்யை இதுவரை இவர் இயக்கவில்லை. ஆனால், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் யோஹன் அத்தியாயம் ஒன்று எனும் திரைப்படத்திற்காக இவர்கள் இருவரும் இணைந்தனர். கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்தார். இப்படத்திற்காக போட்டோஷூட் கூட நடந்தது.
ஆனால், திடீரென இப்படம் கைவிடப்பட்டது. மீண்டும் இந்த படம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், இனிமேல் அது நடக்காத என தெரிந்துவிட்டது.
இந்த நிலையில், விஜய் மிஸ் பண்ண இந்த கதையில் விஷால் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.