முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யோஷிதவை காண வந்த இடத்தில் நாமல் ராஜபக்ச ஆவேசம்

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களுக்கு தேவையானவற்றை செயற்படுத்தாமல் அரசியல் பழிவாங்கல்களில் மாத்திரேமே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்ட தனது சகோதரர் யோஷிதவை காண வந்திருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் பழிவாங்கல்

அரசாங்கம், சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பாரிய சவாலாக எடுத்துக் கொண்டு இவ்வாறான அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு வருவதாகவும் அதன்போது அவர் கூறியுள்ளார்.

யோஷிதவை காண வந்த இடத்தில் நாமல் ராஜபக்ச ஆவேசம் | Namal Condemns Govt S Political Vendetta

இந்த நிலையில், அரசாங்கம் தேர்தல் மேடைகளில் எவ்வளவு பொய்களை கூறினாலும், அவற்றை நீதிமன்றின் முன்னால் நிரூபித்து காட்ட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறையினரையும் எப்சிஐடி பிரிவினரை வைத்து வழக்குகளையும் பொய்யாக சாட்சிகளையும் உருவாக்கினாலும் நீதிமன்றத்தின் முன் அனைத்தும் விசாரணை செய்யப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் அறிவிப்பு

ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபா மதிப்புள்ள வீடு மற்றும் காணியை சந்தேகத்திடமான முறையில் வாங்கியது தொடர்பாக நாமல் ராஜபக்சவின் சகோதரர் யோஷித ராஜபக்ச இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

யோஷிதவை காண வந்த இடத்தில் நாமல் ராஜபக்ச ஆவேசம் | Namal Condemns Govt S Political Vendetta

இந்த நிலையில், இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் திட்டமிட்டு அரசியல் பழிவாங்கல்களை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

எவ்வாறாயினும், குறித்த கைது நடவடிக்கையின் பின்னணியில் எந்தவொரு அரசியல் பழிவாங்கல் செயல்பாடும் இல்லை என அரசாங்க தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்