சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தூதுவர் குழுவின் புதிய தலைவராக இவான் பாபகேர்ஜியோ (Evan Papageorgiou) நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பணியின் தலைவராக சிறிது காலம் பணியாற்றிய பீட்டர் பிரூவர் (Peter Breuer), தனது பதவிக்காலம் முடிந்ததும் வெளியேறியதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
2022-2023 காலகட்டத்தில், இலங்கை அதன் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு, மீண்டும் சர்வதேச நாணய நிதியத் திட்டத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்தபோது நிதியத்தின் நாட்டிற்கான தூதுக்குழுவின் தலைவராக பீட்டர் பிரூவர் செயல்பட்டார்.
புதிய தலைவர்
படிப்படியாகத் திட்டமிடப்பட்ட திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக, கடந்த மூன்று மதிப்பாய்வுகளை மேற்பார்வையிட ப்ரூவர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குழாமின் புதிய தலைவராகப் பொறுப்பேற்ற இவான் பாபகேர்ஜியோ, முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் துணைத் தலைவராக கடமையாற்றியுள்ளார்.