ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானின் ஹொக்காய்டோ மற்றும் டொஹோகு பகுதிகளில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
கட்டடங்கள்
இந்த நில அதிர்வினால் கட்டடங்கள் குலுங்கிய நிலையில் பொதுமக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, வடக்கு ஜப்பானின் பசிபிக் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக அந்நாட்டு பிரதமர் சனே டகாய்ச்சி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஜப்பானில் உள்ள 182 நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், ஒரு வாரத்திற்கு மிகவும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

