பிக்பாஸ் 8
விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் 8 தான். விஜய் சேதுபதி புதியதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்க களமிறங்க நிகழ்ச்சி சூடு பிடித்தது.
இந்த 8வது சீசனில் ரசிகர்கள் அன்றாடம் பார்த்து பழக்கப்பட்ட நிறைய சீரியல் பிரபலங்கள் போட்டியாளர்களாக வந்தார்கள்.
பிக்பாஸ் 8 டைட்டிலை முத்துக்குமரன் வென்றாலும் இந்த சீசனில் பங்குபெற்ற பல போட்டியாளர்கள் மக்கள் மனதை வென்றுவிட்டார்கள்.
ஜாக்குலின்
அதில் ஒருவர் தான் ஜாக்குலின், ஒருமுறை கூட மிஸ் ஆகாமல் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆக தப்பித்துக்கொண்டே வந்தார். ஆனால் அவர் போட்டியிட்ட பணப்பெட்டி போட்டியில் சில விநாடிகள் மிஸ் ஆக தோற்றுப்போனார்.
அவர் வெளியேறியதற்கு அவரைத்தாண்டி ரசிகர்கள் அனைவருமே கவலைப்பட்டார்கள்.
இந்த நிலையில் ஜாக்குலினின் ஸ்பெஷல் வீடியோ வெளியாகியுள்ளது, அதாவது சௌந்தர்யா, ரயான் ஆகியோர் ஜாக்குலின் பிறந்தநாளை ஸ்பெஷல் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். அந்த வீடியோவை கூட சௌந்தர்யா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.