மணிகண்டன் நடித்து இருந்த குடும்பஸ்தன் படம் கடந்த ஜனவரி 24ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. குட் நைட் படத்திற்கு பிறகு இந்த படம் மணிகண்டனுக்கு அதிகம் பாராட்டுகளையும் பெற்று கொடுத்திருக்கிறது.
பாக்ஸ் ஆபிசில் 22 கோடி ரூபாய் வரை குடும்பஸ்தன் வசூலித்து இருக்கிறது. தற்போது அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் ஆகி இருப்பதால் குடும்பஸ்தன் படம் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டது. தற்போது மல்டிப்ளெக்ஸ்களில் மட்டும் குடும்பஸ்தன் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஓடிடி தேதி
தற்போது குடும்பஸ்தன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது.
பிப்ரவரி 28ம் தேதி Zee5 ஓடிடி தளத்தில் குடும்பஸ்தன் படம் வெளியாக இருக்கிறது.