மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் உடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(01.02.2025) அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது, பொதுஜன பெரமுனவின் வடக்குக்கான அமைப்பாளர் கீதனாத் காசிலிங்கமும் மாவை சேனாதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து, நாமல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா, ஜனநாயக ரீதியாக தமிழ் மக்களுக்காக போராடினார்.
இறுதிச்சடங்கு
நாங்கள் ஆட்சியில் இருந்து போதும் தமிழ் மக்களின் நலனுக்காக எங்களுடன் ஆலோசனைகளை நடாத்தியுள்ளார். அவருடைய குடும்பத்தினருக்கும் கட்சி உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன்” எனக் குறிப்பிட்டார்.
உடல்நிலை பாதிப்பால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை சேனாதிராஜா, சிகிச்சைப் பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82ஆவது வயதில் கடந்த 29ஆம் திகதி உயிரிழந்தார்.
மாவை சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கு ஞாயிற்றுகிழமை(02/02/2025) பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் – கஜிந்தன்