நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி, கடைசியாக பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடித்து நல்ல ஹிட் பார்த்தவர்.
காதல், கமர்ஷியல், ஆக்ஷன் மற்றும் வரலாற்று படம் என தனது திரைப்பயணத்தில் நிறைய வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படத்தை முடித்த கையோடு சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார்.
29வது படம்
டாணாக்காரன் பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
இது கார்த்தியின் 29வது படமாம், Dream Warrior Pictures தயாரிக்கும் இப்பட கதைக்களம் கடல் பின்னணியில் நடக்கும் வெறித்தனமாக கேங்ஸ்டர் கதையில் உருவாக உள்ளதாம்.
கார்த்தி 29 படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.