திருகோணமலை – மொரவெவா பகுதியில் அமைந்துள்ள நாலாம் கண்டத்தில் உள்ள காணி உரிமையாளர்களை அவர்களுடைய காணிகளில் உடனடியாக குடியமர்த்த ஆவன செய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) கேட்டுக்கொண்டார்.
திருகோணமலை (Trincomalee) மாவட்ட மொரவெவா பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (29) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் பறையன்குளம் பகுதியில் அமைந்துள்ள எல்லைக் காளியம்மன்
கோவிலைச் சுற்றியுள்ள காணிகளை வனத்துறை கையகப்படுத்தியுள்ள நிலையில் இவற்றை
விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
வெள்ள அனர்த்தம்
மேலும் பன்மதவாச்சி ஊரில்
வடிகால் வசதிகள் சரியாக இல்லை, இதன் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம்
புகுவதனால் இதைத் தடுக்க வடிகால்களை மறுசீரமைக்க வேண்டும்.
முதலிக் குளம் பாடசாலையில் பெளதீக வளங்கள் பற்றாக்குறை
காணப்படுவதுடன் இவற்றை நீக்க ஆவன செய்ய வேண்டும்.
மேலும் நொச்சிக்குளம், சாந்தி புரம், ஒளவை நகர் ஆகிய
ஊர்களில் உள்ள வீதிகள் பழுதடைந்து உள்ள நிலையில் அவற்றை திருத்த ஆவன செய்ய
வேண்டும்“ என கேட்டுக் கொண்டார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தீர்வைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.