முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மதுபானசாலை விவகாரம்… உண்மைகளை மறைக்கும் அநுர அரசு : சாடும் சுமந்திரன்

மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் தகவல்களை அநுர (Anura)அரசாங்கம் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

யாழ் – வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ” மதுபான சாலைகள் அதிகரித்திருப்பது தொடர்பில் யாருடைய சிபார்சிலே இந்த மதுபானசாலைகள் புதிததாக சென்ற வருடம் வழங்கப்பட்டன என்ற தகவலை அரசாங்கம் இன்னமும் மூடிமறைத்துக் கொண்டிருக்கின்றது.

அரசியல் லஞ்சம் பற்றிச் சொல்லுகின்ற அரசாங்கமே எப்படி, யாருடைய சிபார்சில் அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டது என்ற தகவலை இன்று வரை ஒழித்து வைத்திருப்பது அவர்களும் உடன் களவாணிகள் என்பதை தான் நிரூபிக்கின்றது.

அரசியல் லஞ்சமாக சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை தான் பிரதானமான விடயம்.

அதிலும் சில தமிழ் அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்டிருந்தார்கள், அவர்களாகவே ஒத்துக்கொண்டு தேர்தல் அரசியலில் இருந்து விலகினார்கள். ஆனால் பலர் வாயை மூடி மௌனம் சாதிக்கின்றார்கள்.

அரசியல் லஞ்சம் பெறுகின்றவர்கள்  எங்களுடைய இனத்தைக் காட்டிக்கொடுப்பார்கள். தங்களுடைய சொந்த நலனிற்காக சொத்துக் குவிப்பதற்காக அரசியல் இலஞ்சம் பெறுவதில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.” என தெரிவித்தார்.

https://www.youtube.com/embed/c62lxBBy3P0

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்