கார்த்தி
நடிகர் கார்த்தி, கடைசியாக பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடித்து நல்ல ஹிட் பார்த்தவர். பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார்.
இந்த படம் தண்ணீர் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது, இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
பிரபல நடிகையின் காலை தொட்டு வணங்கிய நடிகை ஜோதிகா.. வைரலாகும் புகைப்படங்கள்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் கார்த்தியுடன், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.
இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
வெறித்தனமான அப்டேட்
இந்நிலையில், சர்தார் 2 படத்தின் ரிலீஸ் குறித்து அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, இப்படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.