சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டய கிளப்பியது, சமீபத்தில் 100வது நாளும் கொண்டாடப்பட்டது.
மறைந்த ராணுவ வீவர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்தார்கள்.
அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்கள் கமிட்டாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.
நடிகை அனுஷ்கா ஷெட்டி இந்த சீரியலில் நடித்துள்ளாரா?- எத்தனை பேர் கவனித்துள்ளீர்கள், போட்டோ
ஜீவா தகவல்
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ஜீவா, சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்த படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், என்றென்றும் புன்னகை படத்தில் சிவகார்த்திகேயன், வினய் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது.
அவரிடம் கேட்டபோது அனைவரும் விஜய் டிவியாக உள்ளார்கள், அதனால் வேண்டாம் என மறுத்துவிட்டதாக ஜீவா கூறியுள்ளார்.