முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த போராட்டம் : ஷேக் ஹசீனாவின் குடும்ப வீடு தீக்கிரை!

பங்களாதேஷின் (Bangladesh) பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஷேக் ஹசீனாவின் (Sheikh Hasina) பூர்வீக இல்லமும் அவரது கட்சியின் ஏனைய உறுப்பினர்களின் இல்லங்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தரப்பினரால் தீ வைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பங்களாதேஷில் கடந்த ஆண்டு ஒகஸ்ட் 05 ஆம் திகதி மாணவர்கள் போராட்டத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை பதவி விலகல் செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். 

இதனைத் தொடர்ந்துபங்களாதேஷில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் (Muhammad Yunus) பொறுப்பேற்றார்.

இனப் படுகொலை 

பங்களாதேஷை விட்டு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியேறி 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக அவர் மீது மட்டும் 150க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த போராட்டம் : ஷேக் ஹசீனாவின் குடும்ப வீடு தீக்கிரை! | Sheikh Hasina S Family Home Set On Fire Protesters

மேலும், அவாமி லீக் அரசாங்கத்திற்கு எதிராக இனப் படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் எனக் கூறி டாக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அவாமி லீக்கின் தற்போது கலைக்கப்பட்ட மாணவர் பிரிவான சத்ரா லீக், ஷேக் ஹசீனா இணைணயம் வாயிலாக உரை நிகழ்த்த ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.

ஷேக் ஹசீனா

அதன்படி நேற்று இரவு (05.02.2025) ஷேக் ஹசீனா உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டது. தற்போதைய ஆட்சிக்கு எதிராக ஒரு எதிர்ப்பை பதிவு செய்ய நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக தகவல் பரவியது.

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த போராட்டம் : ஷேக் ஹசீனாவின் குடும்ப வீடு தீக்கிரை! | Sheikh Hasina S Family Home Set On Fire Protesters

இந்நிலையில் , முன்னாள் பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா நேரலையாக இணையம் வாயிலாக உரையாற்ற இருப்பதாக தகவல் பரவிய நிலையில், போராட்டக்காரர்கள் குழுவினர், டாக்காவில் உள்ள அவரது வீட்டை சேதப்படுத்தி தீ வைத்துள்ளனர். 

மேலும் பல போராட்டக்காரர்கள் வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவப்படத்தை சேதப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.