இயக்குனர் அட்லீ தமிழில் பல ஹிட் படங்கள் கொடுத்துவிட்டு ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி அங்கும் முதல் படமே மிகப்பெரிய ஹிட்.
1000 கோடிக்கும் மேல் அந்த படம் வசூலித்தது. அடுத்து சல்மான் கான் உடன் அட்லீ கூட்டணி சேர இருப்பதாக தகவல் வந்தது. ஆனால் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட இருந்த அந்த படம் தற்போது டிராப் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காரணம்
முதலில் இந்த படத்தில் ரஜினிகாந்த் அல்லது கமல்ஹாசன் ஒரு முக்கிய ரோலில் நடிக்க வைக்க முயற்சி நடந்ததாம். ஆனால் அட்லீ தனது படத்தில் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிக்க வேண்டும் என விரும்புகிறாராம்.
அதற்கான முயற்சிகளையும் அட்லீ – சல்மான் மேற்கொண்டதாக தெரிகிறது.
ஆனால் ரஜினி, கமல் போன்ற தென்னிந்திய நட்சத்திரம் யாரும் இல்லாமல் அந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயக்கம் காட்டுவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இது தான் இந்த படம் டிராப் ஆக காரணம் என தற்போது கூறப்படுகிறது.