வரவிருக்கும் தேர்தல்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கூட்டணியாக போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) தலைமையில் விஜேராமவில் உள்ள இல்லத்தில் நேற்று இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடலில் இந்த விடயம் குறித்து பேசப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய கலந்துரையாடலில் எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து பல சுற்று கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இறுதி முடிவு
இதன்படி, பல கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தாங்கள் கலந்துரையாடியதாகவும், ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஷீந்திர ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த கலந்துரையாடலில் அமைப்பாளர்களை நியமிப்பது மற்றும் கட்சி ஒழுங்கமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் பேசப்பட்டதாக சஷீந்திர மேலும் தெரிவித்துள்ளார்.