இந்திரஜா ஷங்கர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தங்களது திறமையை வெளிக்காட்டி இப்போது வெற்றிக் காண்பவர்கள் பலர், அதில் ஒருவர் தான் ரோபோ ஷங்கர்.
அந்நிகழ்ச்சி அவருக்கு கொடுத்த பெயர், புகழை பயன்படுத்தி தனக்கு கிடைக்கும் இடங்களில் எல்லாம் திறமையை வெளிக்காட்டி வந்தார். இப்போது வெள்ளித்திரையில் முன்னணி காமெடியனாக கலக்கி வருகிறார்.
இவரது மகள் இந்திரஜா, விஜய்யின் பிகில் படத்தின் மூலம் நடிக்க தொடங்கி சில படங்கள் நடித்தார்.
இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த மனைவிக்கு சூப்பர் பரிசு கொடுத்த சினேகன்.. வீடியோவுடன் இதோ
அடுத்த படம்
தனது முறைமாமனை திருமணம் செய்துகொண்ட இந்திரஜாவிற்கு அண்மையில் குழந்தை பிறந்தது. அந்த சந்தோஷத்தை குடும்பத்தினர் பெரிய அளவில் கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் இந்திரஜா தான் நடித்துள்ள புதிய படத்தின் தகவலை வெளியிட்டுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் இயக்கத்தில் Kooran என்ற படத்தில் நடித்துள்ளாராம், இப்படம் வரும் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகவுள்ளதாம்.
View this post on Instagram