நடிகர் செந்தில் சின்னத்திரையில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவர். சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற பல பிரபலமான தொடர்களில் அவர் நடித்து இருக்கிறார்.
தற்போது ஜீ தமிழின் அண்ணா சீரியலில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் செந்தில் தான் சைபர் க்ரைமில் பணம் இழந்துவிட்டதாக அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
பணம் போச்சு
“எனக்கு தெரிந்த நபர் ஒருவர் வாட்சப் நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது. 15 ஆயிரம் பணம் கேட்டிருந்தார். நான் ட்ரைவிங்கில் இருந்த நிலையில் அவர் சொன்ன நம்பருக்கு பணம் அனுப்பிவிட்டேன்.”
“அதன் பிறகு பெயரை பார்த்தால் வேறொருவர் பெயர் அதில் இருந்தது. அது பற்றி போன் செய்து கேட்டபோது தான் அவர் தனது வாட்சப் ஹேக் ஆகிவிட்டது என்ற தகவலை கூறினார்.”
“இது போல 500 பேர் இன்று கால் செய்துவிட்டார்கள் என கூறினார்கள். அப்போது தான் சைபர் க்ரைமில் பணத்தை இழந்துவிட்டேன் என்பது புரிந்தது. உடனே சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்து இருக்கிறேன்” என செந்தில் கூறி இருக்கிறார்.
View this post on Instagram