களுத்துறை, வாதுவ பிரதேசத்தில் மனைவியின் கழுத்தை மீன் வெட்டு கத்தியால் அறுத்து கொலை செய்த நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக இன்று மதியம் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண் வாதுவ, வேரகம பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் என தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் விசாரணை
தகவல் கிடைத்ததும், பொலிஸார் வீட்டிற்குச் சென்று சோதனையிட்டனர். அங்குள்ள ஒரு அறையில் உள்ள படுக்கைக்கு அருகில் இரத்த வெள்ளத்தில் சடலம் கிடந்ததை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தியுடன் சந்தேக நபர், பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் குறித்து பாணந்துறை பிரிவு குற்றப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

