பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன்.
கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது. பின், லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல சீரியல் நடிகை.. முக்கியமான கேரக்டராம்!
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன் dragon திரைப்படம் வெளியானது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்த Dragon திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மன்னிப்பு கேட்ட அஸ்வத்
இந்நிலையில், இயக்குநர் அஸ்வத் தனது தாய் மற்றும் தந்தை குறித்து இணையத்தில் பகிர்ந்த விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தனது தாய் மற்றும் தந்தை உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு கீழ், “நான் டாக்டராக வேண்டும் என்ற என் பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாமல் போனதற்காகவும், அடங்காத என்ஜினியரிங் மாணவனாக இருந்ததற்காகவும் பெற்றோரிடம் நான் கேட்கும் மன்னிப்பு தான் இந்த டிராகன் படம்” என்று குறிப்பிட்டுள்ளார்.