ரவி மோகன்
கடந்த வருடம் அவர் தனது வாழ்க்கையில் எடுத்த பெரிய முடிவுக்கு பின் தனது சினிமா பயணத்திலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.
ஜெயம் ரவியை ரவி மோகனாக மாற்றிவிட்டார். மும்பைக்கு தனது ஆபிஸை மாற்றிவிட்டார், அதோடு தயாரிப்பு-இயக்கம் போன்றவற்றிலும் கவனம் செலுத்த இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
நடிகரின் பேட்டி
அண்மையில் ஈஞ்சம்பாக்கத்தில் கடை திறப்பு விழாவில் ரவி மோகன் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் உங்களின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன என கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு ரவி மோகன், வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜீனி படத்தில் நடிக்கிறேன், விரைவில் அப்டேட் வரும்.
பராசக்தி படத்தில் எனது முதற்கட்ட படப்பிடிப்பு முவடைந்துவிட்டது, அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு இலங்கை செல்கிறோம்.
கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது, கணேஷ் பாபு அற்புதமாக இயக்கி வருகிறார், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.