ஹமாசினால் (Hamas) பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட 86 வயது இஸ்ரேலியர் (Israel) உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி சொலொமோ மன்சுர் என்ற இஸ்ரேலிய பணயக்கைதி உயிரிழந்துவிட்டார் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் தெரிவித்துள்ளார்.
பணயக்கைதி
ஈராக்கில் பிறந்தவரான இவர் இஸ்ரேலின் கிபுட்ஸ் கிஸிபும் பகுதியில் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டார்.
அதேவேளை ஹமாஸ் அமைப்பு முதல்கட்டமாக விடுதலைசெய்யவுள்ள 33 பணயக்கைதிகளின் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் பெறப்பட்ட புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் 86 வயது பணயக்கைதி உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.