முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜேர்மனியில் பரபரப்பு: உக்ரைன் ஜனாதிபதி வருகையின் போது நடந்த அசம்பாவிதம் – பலர் படுகாயம்

புதிய இணைப்பு

ஜேர்மனி – மியூனிக் நகரம் உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டை நடத்தத் தயாராகி வந்த நிலையில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்தியவர் 24 வயதான ஆப்கானிஸ்தான் புகலிடம் கோருபவர் என தெரியவந்துள்ளது.

அத்தோடு, விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயர்மட்ட மியூனிக் பாதுகாப்பு மாநாட்டிற்காக அமெரிக்க பிரதி தலைவர் ஜே.டி. வான்ஸ் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளிட்டவர்கள் நகரத்திற்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு 

ஜேர்மனி (Germany) – மியூனிக் நகரத்தில் கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் மோதியதில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவராத நிலையில், 15 மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றே தெரிவிக்கப்படுகிறது.

பலர் கவலைக்கிடம்

இதன்படி, காவல்துறையினர் குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறியுள்ளதுடன், அவர்களில் பலர் கவலைக்கிடமாகவும், மோசமான நிலையிலும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியில் பரபரப்பு: உக்ரைன் ஜனாதிபதி வருகையின் போது நடந்த அசம்பாவிதம் - பலர் படுகாயம் | Germany Munich Accident Today Many Injured

இந்த நிலையில், குறித்த பகுதியில் மீட்பு நடவடிக்கைள் இடம்பெற்று வருவதாகவும், காரின் சாரதி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இது பயங்கரவாத தாக்குதலா விபத்தா என்பது குறித்து தெரியவராத நிலையில், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உக்ரைன் ஜனாதிபதியின் விஜயம்

மேலும், போக்குவரத்து தொழிற்சங்கமான வெர்டியுடன் இணைக்கப்பட்ட பேரணிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனியில் பரபரப்பு: உக்ரைன் ஜனாதிபதி வருகையின் போது நடந்த அசம்பாவிதம் - பலர் படுகாயம் | Germany Munich Accident Today Many Injured

இதேவேளை, குறித்த நகரத்தில் மியூனிக் பாதுகாப்பு மாநாடு ஆரம்பிக்கபடவிருந்த நிலையில், அமெரிக்க பிரதி தலைவர் ஜே.டி. வான்ஸும் உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலென்ஸ்கியும் இன்று வரவிருந்த சில மணி நேரத்திற்கு முன்பு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.   

பாதுகாப்பு மாநாட்டு, சம்பவ இடத்திலிருந்து சுமார் 1.5 கிலோமீட்டர் (1 மைல்) தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.