வெளிநாடு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு (R.Shanakiyan) எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம்
தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
துருக்கியில் செயற்கை நுண்ணறிவு(AI) சம்பந்தமான செயலமர்வில் கலந்து கொள்ள சாணக்கியன் சென்றுள்ள நிலையில்,
இலங்கை குற்றவியல் நடவடிக்கைமுறைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 106(1)(2)(3)யின் கீழ் இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி விடயம் சம்பந்தமாக மட்டக்களப்பு தலைமை
காவல் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்றுக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையை
ஆராய்ந்த மன்று பின்வருமாறு தடையுத்தரவொன்றினை பிறப்பிப்பதற்கு
உத்தரவிட்டுள்ளது.
இலங்கையின் சுதந்திர தினம்
இது தொடர்பில் சாணக்கியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் சுதந்திர தினம் பெப்ரவரி 4ஆம் திகதி
கொண்டாடப்படவேண்டியது என இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 08ஆவது
சரத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த தினத்தில் மட்டக்களப்பு காந்தி பூங்கா
பிரதேசத்தில் நடைபெற இருக்கும் சுதந்திரதின நிகழ்வுகளை பாதிக்கும் வகையிலான
எந்தவொரு ஆர்பாட்டத்தையோ சட்டவிரோத செயற்பாடுகளையோ மட்டக்களப்பு நீதிவான்
நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும்
மேற்கொள்ளக்கூடாதென தடையுத்தரவு எனக்கும் இன்னும் பலருக்கும்
பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.