முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கு திசையில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாலைதீவுகளுக்கு அருகாக நிலை கொண்டுள்ளது.

இதனால் கிழக்கு, ஊவா, சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களுக்கு கிடைத்து வரும் மழை நாளை(22.12.2025) இரவு முதல் படிப்படியாக குறைவடையும் வாய்ப்புள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யாழ். பல்கலையின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா,

வங்காள விரிகுடா

“ எதிர்வரும் 28.12.2025 அன்று வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென் கிழக்கே புதிய காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக மீண்டும் எதிர்வரும் 28.12.2025 முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மழை கிடைக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மழை எதிர்வரும் 07.01.2026 வரை தொடரும் வாய்ப்புள்ளது. ஆனால் இடையில் ஒரு சில நாட்கள் மழையற்ற நாட்களாக அமையும்.

அதேவேளை எதிர்வரும் 31.12.2025 முதல் மத்திய, ஊவா, வடமத்திய, தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களுக்கு மழை கிடைக்க தொடங்கும்.

மீண்டும் பரவலாக மழை

இப்பிரதேசங்களுக்கும் மழை எதிர்வரும் 07.01.2026 வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் எதிர்வரும் 10.01.2026 முதல் 13.01.2026 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் 2026 ஜனவரி மாதத்தின் பெரும்பாலன நாட்கள் மழை நாட்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் குளிரான வானிலை எதிர்வரும் 26.12.2025 முதல் குறைவடையும் சாத்தியமுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்