பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டில் மகா சிவராத்திரியில் பல வருடங்களுக்கு பின் அரிய கிரக பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளது.
அசுரர்களின் குருவான சுக்கிரன் மீன ராசியில் இருப்ாதுடன் அப்போது அந்த மீன ராசியில் ராகுவும் இருக்கின்றமையினால் மீன ராசியில் ராகு, சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது.
அதே போன்று இந்நாளில் கிரகங்களின் தலைவனான சூரியனும், சனி பகவானும் கும்ப ராசியில் ஒன்றாக பயணிப்பார்கள்.
இப்படியான நிகழ்வுகள் சுமாராக 152 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் நிகழும் நிலையில், அரிய பெயர்ச்சிகளால் குறிப்பிட்ட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சிவபெருமானின் செல்லபிள்ளைகளாக இருப்பார்களாம்.
அப்படியானவர்கள் என்னென்ன நட்சத்திரங்களில் பிறந்திருப்பார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
[PXLZM8Y
]
1. மிருகசீரிஷம்
- மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள்.
- அவர்களின் முயற்சிகள் அனைத்திற்கு சிவ பெருமான துணையாக இருப்பார்.
- இந்த நட்சத்திரத்தில் பிறந்த அனைவரும் வேலைகளில் வெற்றி பெறுவார்கள்.
- அவர்களின் வாழ்க்கையில் பணக்கஷ்டங்கள் பெரிதாக வராது.
- எந்த துறையில் பணி புரிந்தாலும் ஈசனின் அருளால் உச்சத்தில் இருப்பார்கள்.
2. பூரட்டாதி
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவபெருமானுடன் தொடர் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- இவர்கள் ஞானத்தின் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- சிவபெருமானை போன்று மற்றவர்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- இந்த நட்சத்திரத்தில் பிறந்த அணைவரும் சிவபெருமானின் ஞானம், தன்னலமற்ற தன்மை மற்றும் மனிதகுலத்திற்கான சேவை ஆகிய பண்புகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.
3. விசாகம்
- சிவபெருமானை போன்று இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஆழ்ந்த மாற்றங்களை விரும்பும் நபராக இருப்பார்கள்.
- புறக்கணித்தல் மற்றும் மீளுருவாக்கம் ஆகியவற்றின் சக்திகளை உள்ளடக்கியுள்ளனர்.
- அவர்களின் உணர்ச்சி ஆழம், சுயபரிசோதனை மற்றும் மாற்றும் திறன் ஆகியவற்றின் உள்ளார்ந்த குணங்கள் சிவபெருமானின் ஆற்றல்களுடன் ஒத்துப்போகின்றன.
- அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் சிவபெருமான் அவர்களை ஆசீர்வதிப்பார்.
- எப்போதும் மற்றவர்களுக்கு சிறந்த உதாரணமாக இருப்பார்கள்.