நடிகர் ஷாருக் கான் ஹிந்தி சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது படங்கள் மிகப்பெரிய வசூலையும் குவித்து வருகின்றன.
ஷாருக் கான் குடும்பத்துடன் வசித்து வரும் மன்னத் என்ற கட்டிடம் மும்பையில் அதிகம் பிரபலம். தற்போது அந்த கட்டிடத்தில் இருந்து ஷாருக் குடும்பம் வேறு இடத்திற்கு மாற இருக்கிறார்கள்.
ஏற்கனவே 6 மாடி இருக்கும் மன்னத் கட்டிடம் மீது இன்னும் இரண்டு அடுக்குகள் கட்ட ஷாருக் கான் மனைவி சமீபத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
புது அபார்ட்மெண்ட் வாடகை
ஷாருக் கான் குடும்பம் அடுத்து மும்பை பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியில் இருக்கும் ஒரு அபார்ட்மென்டுக்கு தான் குடிபெயர இருக்கின்றனர்.
அந்த அப்பார்மென்டின் நான்கு தளங்களை ஷாருக் வாடகைக்கு எடுத்துள்ளார். அதன் வாடகை மட்டும் மாதம் 24 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.