கம்பஹா – பியகம, சியம்பலாபேயில் உள்ள விகாரைக்கு அருகில் அதிபர் ஒருவரை கடத்தி சென்று தாக்கிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பியகம காவல்துறையனருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று (08) இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜீப் ரக வாகனத்தில் குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு கடத்தி செல்லப்பட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காரணம்
சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய ஆசிரியர் மற்றும் அவரின் 32 வயதுடைய மனைவியுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தாக்குலுக்கு உள்ளானவர், சந்தேகநபரான ஆசிரியர் பணியாற்றும் பாடசாலையின் பிரதி அதிபர் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, தாக்குலானது, முன்பகை காரணமாக நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.