கிரிப்டோ கரன்சி
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக கூறி, புதுச்சேரியை சேர்ந்த 10 பேரிடம் ரூ. 60 கோடியே 60 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதில், கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் பங்கேற்று, விளம்பரப்படுத்தியதாக கூறப்படுகிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகை தமன்னாவிற்கு ரூ. 25 லட்சமும், நடிகை காஜல் அகர்வாலுக்கு ரூ. 18 லட்சமும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வந்த வண்ணம் இருந்தது.
தமிழ் சினிமாவில் இது மிகவும் கடினம்.. மனம் திறந்த இயக்குநர் பா.இரஞ்சித்
பரபரப்பு அறிக்கை
இந்நிலையில், இது தொடர்பாக நடிகை தமன்னா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
” கிரிப்டோ கரன்சி முறைகேட்டில் எனக்கு தொடர்பிருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை பார்த்தேன்.
இது போன்ற பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும். இது தொடர்பாக மீடியாவில் உள்ள என் நண்பர்களுக்கு வேண்டுகோளை விடுக்கிறேன். அதேசமயம், இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை எனது குழுவினர் எடுத்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.