கண்ணப்பா
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடித்து உருவாகியுள்ள திரைப்படம் கண்ணப்பா. இப்படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை எழுதியவரும் ஹீரோ விஷ்ணு மஞ்சு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தில் பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், மோகன் பாபு, ப்ரீத்தி முகுந்தன் என பலரும் நடித்துள்ளனர்.
முதல் நாள் அகத்தியா திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க
இதில் அக்ஷய் குமார் சிவன் கதாபாத்திரத்திலும், காஜல் அகர்வால் பார்வதி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் ரெபல் ஸ்டார் பிரபாஸ் ருத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
டீசர் 2
பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து ஒரு டீசர் வெளிவந்திருந்த நிலையில், தற்போது கண்ணப்பா டீசர் 2-வை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த டீசர்..