சரிகமப சீசன் 5
நேற்று (நவம்பர் 23) பிரம்மாண்டத்தின் உச்சமாக ஒரு விஷயம் தமிழ் சின்னத்திரையில் நடந்தது.
அது என்ன விஷயம் எல்லோருக்கும் தெரிந்தது தானே, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப சீசன் 5 பைனல் நிகழ்ச்சி தான். கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் சுசாந்திகா மக்களின் அதிக ஓட்டுகள் பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றார்.
முதல் பரிசு பெற்றவருக்கு மட்டும் இல்லை ரன்னர் அப் ஆக வந்தவர்களுக்கும் பல வகையில் உதவிகள் கிடைத்துள்ளது.

இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்… எமோஷ்னலான மேடை
சின்னு செந்தமிழன்
சரிகமப இறுதி மேடையில் சின்னு செந்தமிழன் தைய தைய பாடலைப் பாடி முடித்ததும் அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருந்தது.
சின்னுவுக்கு ஒரு ரசிகர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு புதிய பைக் ஒன்றை வாங்கி பரிசாக அனுப்பி வைத்துள்ளார்.
அதைப்பார்த்ததும் சின்னு செந்தமிழன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

ஒரு மெக்கானிக் செட்டில் பணிபுரிந்து வந்த சின்னு அவ்வப்போது ஏதாவது பாடல்கள் பாடி அந்த வீடியோக்களை வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமானார்.
தற்போது அவருக்கு துபாயில் இருக்கும் Haitian Middle East நிறுவனம் சின்னு செந்தமிழனுக்கு Service Engineer ஆக வேலை கொடுத்துள்ளனர். அந்த Appointment கடிதத்தை பார்த்ததும் சின்னு செந்தமிழன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் என்று தான் கூற வேண்டும்.
View this post on Instagram

