குட் பேட் அக்லி
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டீசர் நேற்று மாலை வெளிவந்தது.
இதுவரை Youtubeல் 25 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனையும் படைத்துள்ளது. இந்த டீசரில் பல விதமான கெட்டப்பில் தோன்றி அனைவரையும் வியக்க வைத்துள்ளார் அஜித். வின்டேஜ் லுக்கில் செம மாஸாக அஜித் கொடுத்த எண்ட்ரி எல்லாம் வேற லெவலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடவுளாக பிரபாஸ்.. பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள கண்ணப்பா படத்தின் டீசர் 2 இதோ
ரீமிக்ஸ் பாடல்
ஆதிக் ரவிச்சந்திரனின் முந்தைய படமான மார்க் ஆண்டனியில் ரீமிக்ஸ் பாடல் இருந்தது. பஞ்சுமிட்டாய் சேலை கட்டி பாடலை ரீமிக்ஸ் செய்து அதனை படத்தில் வரும் ஆக்ஷன் காட்சியுடன் இணைந்து மாஸ் காட்டியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்திலும் ரீமிக்ஸ் பாடல் இருக்கிறதாம். தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலை இப்படத்தில் ரீமிக்ஸ் செய்துள்ளாராம் ஜிவி பிரகாஷ்.
படத்தில் இந்த பாடல் இடம்பெறும் காட்சி திரையரங்கையே அதிர வைக்கும் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த பாடல் வில்லன் அர்ஜுன் தாஸுக்கு என்றும் தகவல் வெளியாகியுள்ளது.