முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் பிரிக்கவில்லை: சுமந்திரன் விளக்கம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே இருக்கின்ற கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு, பின் ஒன்றாக ஆட்சியமைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது, அந்த முடிவு சரியான விதத்தில் புரிந்துகொள்ளப்படாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாங்கள் பிரித்துவிட்டோம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என இலங்கைத் தமிழரசுக் கட்சின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

தொகுதி அடிப்படையிலான கலந்துரையாடல்

மேலும் கூறுகையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக தொகுதி அடிப்படையிலான கலந்துரையாடல்கள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தை பொறுத்தவரையில் 17 சபைகள் உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் பிரிக்கவில்லை: சுமந்திரன் விளக்கம் | Tamil National Alliance Sumanthiran

இந்தச் சபைகள் அமைந்துள்ள வெவ்வேறு தொகுதிகளில் கலந்துரையாடி, அதன்பின்னர் மாவட்டக் கிளையில் இது குறித்து பேசி சில முடிவுகளை எடுக்க வேண்டிய தேவையுள்ளது.

கடந்த வாரத்தில் மாவட்டக் கிளையில் தீர்மானம் எடுத்தோம்.

அதன்படி ஒவ்வெரு தொகுதிகளிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

எமது கட்சி தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை சென்ற தடவை தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே நாங்கள் எடுத்திருந்தோம்.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே இருக்கின்ற கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிட்டு, பின்னர் ஒன்றாக ஆட்சியமைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

அந்த முடிவு சரியான விதத்தில் புரிந்து கொள்ளப்படாமல், நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரித்துவிட்டோம் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

கட்சித் தலைவர்களின் எண்ணம்

ஆனால், இந்தத் தேர்தல் முறைமையைக் கருத்தில்கொண்டு தனியாக ஒரு கட்சி ஆட்சியமைப்பது மிகவும் கஷ்டமான விடயம் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆகவே, இப்போது, நாங்கள் சிபாரிசு செய்த அந்த முறை சிறந்தது என்ற எண்ணம் ஏனைய கட்சித் தலைவர்கள் மத்தியிலும் காணப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் பிரிக்கவில்லை: சுமந்திரன் விளக்கம் | Tamil National Alliance Sumanthiran

ஆகவே, அவர்களிடமும் நாங்கள் இது குறித்து பேசியிருக்கின்றோம்.

வெவ்வேறு இடங்களில் சில வேளைகளில் சற்று வித்தியாசமான அணுகுமுறைகளை நாங்கள் கையாள வேண்டியுள்ளதாக இருக்கின்றது.

இந்த தேர்தல் முறைமையை எப்படியாக எங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துவது என்பது குறித்து ஒவ்வொரு சபையாக
நாங்கள் ஆராய வேண்டிய தேவை இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.