விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது, சினிமாவில் தனது கடைசி படத்தில் நடித்து கொடுத்துவிட்டு முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்த உள்ளார்.
பட்டம் பெற்ற விஜய் பட நடிகை இந்திரஜா.. கணவர் குழந்தையோடு வைரலாகும் புகைப்படங்கள்
இவர் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்று தமிழன். இப்படத்தின் மூலம் தான் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா முதன் முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின், அவர் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
உடைத்த ரகசியம்
இந்நிலையில், பிரியங்கா சோப்ராவின் அம்மா விஜய் குறித்தும் தமிழன் படம் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், “தமிழன் படத்தில் நடிப்பதற்கு முதலில் பிரியங்கா சோப்ரா ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், அவரது தந்தை இந்த படத்தில் பிரியங்கா நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் தன் தந்தைக்காக நடிக்க ஒப்புக்கொண்டார்.
அதேபோல் விஜய் மீது பிரியங்காவுக்கு ரொம்பவே மரியாதை இருக்கிறது. அந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுவது பிரியங்காவுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அதை அவர் கற்றுக்கொள்ளும் வரை விஜய் மிகவும் பொறுமையாக இருந்தார்.