சுவிட்சர்லாந்துக்கு (Switzerland) சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில், கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்துக்கு இணையாக சுற்றுலாப்பயணிகளின் வருகை மீண்டும் திரும்பியுள்ளதால் சுவிஸ் சுற்றுலா அலுவலகம் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், 2024 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்துக்கு வருகை புரிந்து அங்குள்ள சுற்றுலா விடுதிகளில் ஒரு இரவாவது தங்கிய சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை சுமார் 43 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விடுதி
ஜேர்மனியர்களுக்கு அடுத்தபடியாக சுவிட்சர்லாந்துக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா செல்பவர்கள் அமெரிக்கர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு, 2023 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, அவர்கள் எண்ணிக்கை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிரித்தானியா (United Kingdom), சீனா (China) மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்து சுற்றுலா வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.