ஷ்ரத்தா கபூர்
பாலிவுட் சினிமாவில் வாரிசுகளின் ராஜ்ஜியம் அதிகம் உள்ளது.
அப்படி நடிகர் சக்தி கபூர் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் சினிமாவில் 2010ம் ஆண்டு டீன் பட்டி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஷ்ரத்தா கபூர்.
முதல் படமே அவருக்கு தோல்வியை கொடுக்க 2013ம் ஆண்டு அவர் நடித்த ஆஷிகி 2 படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது.
மருத்துவமனையில் இருந்து வந்த மனோஜ், மீனா கொடுத்த அதிரடி பதில்.. சிறகடிக்க ஆசை புரொமோ
அப்படத்திற்கு பின் ஏக் வில்லன், ஹைதர், பாகி, சிச்சோர், ஸ்ட்ரீ மற்றும் ஜுதி மைன் மக்கார் உட்பட பல வெற்றிகரமான படங்களில் நடித்தார்.
இன்ஸ்டாகிராமில் 88.6 மில்லியன் பின் தொடர்பவர்களை கொண்டு அதிக பாலோவர்ஸ் வைத்துள்ள இந்திய நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார்.
சொத்து மதிப்பு
இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடும் ஷ்ரத்தா கபூரின் சொத்து மதிப்பு ரூ. 123 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.