விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது நீ நான் காதல். இதில் பிரேம் ஜேக்கப் மற்றும் வர்ஷினி சுரேஷ் ஆகியோர் ஹீரோ – ஹீரோயினாக நடித்து வருகிறார்கள்.
இந்த தொடரில் அனு என்ற ரோலில் அஷ்ரிதா நடித்து வந்தார். ஆனால் அவர் தற்போது திடீரென தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.
அவருக்கு பதில் இவர்
இந்நிலையில் தற்போது அவருக்கு பதிலாக நடிகை சாய் காயத்ரி அந்த ரோலில் நடிக்க தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அவர் இதற்கு முன் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.