பிரதீப் ரங்கநாதன்
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் வாங்கி கொடுத்தது.
அந்த நடிகை என் வீட்டில் தான் தங்குவார், மனைவிக்கு தெரியும்.. நாகர்ஜுனா ஓபன் டாக்
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிப்பில் LIK திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான Dragon திரைப்படத்திலும் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார் பிரதீப்.
அதிரடி ரிப்ளை
இந்நிலையில், தற்போது நிகழ்ச்சி ஒன்றில் தனுஷ் குறித்து வந்த கேள்விக்கு பிரதீப் அதிரடி பதில் கொடுத்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது செய்தியாளர் ஒருவர் பிரதீப், தனுஷ் போன்று இருப்பது பிளஸ்ஸா? இல்லை மைனஸா
என்று கேள்வி எழுப்ப அதற்கு, ” நான் பேசுவது, எனது செயல்பாடுகள், எனது நடவடிக்கை அனைத்துமே எனது இயல்பு தான்.
நான் கண்ணாடியை பார்க்கும்போது என்னை தான் பார்க்கிறேன், நான் நடித்த இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் எனது சினிமா பயணத்தில் நான் நன்றாக சென்று கொண்டிருக்கிறேன் என நம்புகிறேன்”என்று கூறியுள்ளார்.