ரஜினிகாந்த்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சோப்பின் சபீர், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர். இதில், ஒரே ஒரு பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே குத்தாட்டம் போட்டுள்ளார்.
உதவி கேட்டு நிற்காதீர்கள், வாழ்நாள் முழுவதும் பிரச்சனை.. செல்வராகவன் வருத்தம்
கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், இப்படம் ஆகஸ்ட் மாதம் அல்லது தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
டீசர் ரிலீஸ்
இதற்கிடையில், படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டிருந்த நிலையில், இது குறித்த அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வரும் மார்ச் 14 – ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.