சூடானில் (Sudan) இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமான விபத்து நேற்று (25) நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, குறித்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம்
சூடானின் வடக்கு ஓம்துர்மானில் உள்ள வாடி ஜெய்ட்னா இராணுவ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மக்கள் தொகை கொண்ட பகுதியில் இந்த விமான விபத்து நிகழ்ந்தது.
விமான விபத்து பெரும்பாலும் தொழில்நுட்ப காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்று அந்நாட்டு இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.