வரலட்சுமி
தமிழ் சினிமாவின் நாட்டாமை சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.
வரலட்சுமி சினிமாவில் நடிக்க முதலில் பெற்றோர்களிடம் இருந்து பெர்மிஷன் வரவில்லையாம், இதனால் அவர் முன்னணி இயக்குனர்களின் பல பட வாய்ப்பை மிஸ் செய்துள்ளார்.
பின் எப்படியோ வீட்டில் அனுமதி வாங்கி சிம்புவுடன் போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
அதன்பின் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 என தொடர்ந்து தமிழில் நடித்தவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வந்தார்.
பாடகி கல்பனா தற்கொலை முயற்சி செய்யவில்லையா, இப்படியா ஆனது?- அவரது மகள் கூறிய விஷயம்
கடைசியாக இவரது நடிப்பில் எப்போதோ உருவான மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைபோடு போட்டது. இப்போது வரலட்சுமி, விஜய்யின் கடைசி படமான ஜன நாயகனில் கமிட்டாகி இருக்கிறார்.
சொத்து மதிப்பு
கடந்த ஆண்டு மும்பை தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்த நிலையில் இன்று வரலட்சுமி தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அதேசமயம் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரங்களும் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
ஒரு படத்துக்கு ரூ. 70 லட்சம் வரை சம்பளம் வாங்கும் இவரின் சொத்து மதிப்பு ரூ. 25 கோடி இருக்கும் என்கின்றனர்.
அவரது கணவர் நிக்கோலாய்க்கு கிட்டத்தட்ட ரூ. 100 கோடி வரை சொத்து இருக்குமாம்.