சினிமா ரசிகர்கள் என்று வெளியாகும் புது படங்களை விரும்பி பார்ப்பதற்கு ஒரு தனி கூட்டமே உள்ளது. ஒவ்வொரு வாரமும் என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், நாளை அதாவது மார்ச் 7 – ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறித்து கீழே காணலாம்.
கிங்ஸ்டன்:
கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ள திரைப்படம் கிங்ஸ்டன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
28 – வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை மீனாட்சி சவுத்ரி சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இத்தனை கோடியா?
ஜென்டில்வுமன்:
அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜென்டில்வுமன். இப்படத்தில் ஹரிகிருஷ்ணன் உடன் பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவும் நடித்துள்ளார்.
நிறம் மாறும் உலகில்:
அறிமுக இயக்குநர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் நிறம் மாறும் உலகில். இப்படத்தில் நட்டி, யோகி பாபு, ரியோ ராஜ், சாண்டி மாஸ்டர், சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.