முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் அர்ச்சுனா எம்.பியின் கைகலப்பு விவகாரத்திற்கு முற்று

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் யாழ். காவல் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (12.02.2025) நாடாளுமன்றஉறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக மாறி கைக்கலப்பில் முடிந்தது.

கைக்கலப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரின் தலையில் பீங்கானால் அடித்தமையால், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது உயிருக்கு ஆபத்து என யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

யாழில் அர்ச்சுனா எம்.பியின் கைகலப்பு விவகாரத்திற்கு முற்று | New Twist In The Arjuna Attack Incident

அதேவேளை, காயமடைந்த நபரும் தன் மீதான தாக்குதலுக்கும் பரஸ்பர முறைப்பாட்டை வழங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (14) இரவு இரு தரப்பினரையும் யாழ்ப்பாண காவல் நிலையத்திற்கு அழைத்து, யாழ்ப்பாண உதவி காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாகவும், முறைப்பாடுகளை மீள பெற்றுக்கொள்வதாகவும் கூறி சமரசமாக செல்வதற்கு உடன்பட்டதை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினை காவல் நிலையத்தில் வைத்து தீர்த்து வைக்கப்பட்டது.

செய்திகள் : யாழ். நிருபர் பிரதீபன்

YOU MAY LIKE THIS

https://www.youtube.com/embed/TANY5xZ47sw

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.