முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைன் மக்கள் மீது விழுந்த ட்ரம்பின் பார்வை : வீசாக்களை நிறுத்த ஆராய்வு

அமெரிக்க (United States) முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) காலத்தில் அமெரிக்காவிற்கு சென்ற ஆயிரக்கணக்கான உக்ரைனியர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்துச்செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார்.

உக்ரைனியர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்து செய்வதுகுறித்து ஆராயப்படுகின்றதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ட்ரம்ப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ட்ரம்ப் “இது குறித்து நான் ஆராய்கின்றேன்,நாங்கள் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை நிச்சயமாக அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா செல்வதற்கு அனுமதி

அதேசமயம் உக்ரைனை சேர்ந்தவர்களிற்கு விசா வழங்கியது குறித்து இரு வேறுபட்டகருத்துக்கள் உள்ளன நான் விரைவில் இது குறித்து முடிவெடுப்பேன் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மக்கள் மீது விழுந்த ட்ரம்பின் பார்வை : வீசாக்களை நிறுத்த ஆராய்வு | Trump S Gaze Fell People Of Ukraine Stop Visa

இதேவேளை, முன்னதாக உக்ரைனை சேர்ந்தவர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்து செய்யும் நடவடிக்கைகளை அடுத்தமாதம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை இது குறித்து எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என வெள்ளை மாளிகையின் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

ஜோபைடனின் ஆட்சிக்காலத்தில் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்த்து மற்றும் உக்ரைனிற்காக ஒன்றிணைதல் திட்டங்களின் கீழ் 200,000க்கும் அதிகமான உக்ரைனியர்களிற்கு அமெரிக்கா செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் உக்ரைனிற்காக ஐக்கியப்படும் திட்டத்தை டிரம்ப் இடைநிறுத்தியிருந்தார்.

உக்ரைன் மக்கள் மீது விழுந்த ட்ரம்பின் பார்வை : வீசாக்களை நிறுத்த ஆராய்வு | Trump S Gaze Fell People Of Ukraine Stop Visa

இதேவேளை ஜோபைடன் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு பத்து நாட்களிற்கு முன்னர் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்த்து விசாக்களை 2026வரை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.