முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமெரிக்காவிற்கு மீண்டும் நேசக்கரம் நீட்டும் உக்ரைன் ஜனாதிபதி

அமெரிக்காவுடன்(us) ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் (ukraine)முழு தயாராக உள்ளது’என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி(volodymyr zelensky) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (trump)அண்மையில் வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ட்ரம்ப் உடனான உறவை சரி செய்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறினார்.

உக்ரைன் தலைநகரில் பிரிட்டன் அதிகாரிகளுடன் பேச்சு

இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கிவ்வில் பிரிட்டன் அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தலைமையிலான அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில்; தலைநகர் கிவ்வில் பிரிட்டன் மற்றும் உக்ரைன் நாடுகளின் அதிகாரிகள் இடையே மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமெரிக்காவிற்கு மீண்டும் நேசக்கரம் நீட்டும் உக்ரைன் ஜனாதிபதி | Ukrainian President Ready For Talks With The Us

அமைதி மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான உறவு குறித்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. எங்களுக்கு ஆதரவு அளிக்கும் பிரிட்டனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஷ்யாவுடனான போரை நியாயமான முறையில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான உக்ரைன் உறுதியாக உள்ளது.

சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் 

அடுத்த வாரம் உக்ரைன் அதிகாரிகளுடன் சேர்ந்து சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். திங்கட்கிழமை சவுதி அரசரை சந்தித்து பேச இருக்கிறோம். தொடர்ந்து, மறுநாள் அமெரிக்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில், இராணுவ அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.

அமெரிக்காவிற்கு மீண்டும் நேசக்கரம் நீட்டும் உக்ரைன் ஜனாதிபதி | Ukrainian President Ready For Talks With The Us

அமெரிக்காவுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் முழு தயாராக இருக்கிறது

போர் தொடங்கியது முதல் உக்ரைன் அமைதியைத் தான் வலியுறுத்தி வருகிறது. யதார்த்தமான பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதுதான் முக்கியம், எனக் கூறினார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.