டிராகன்
தமிழ் சினிமாவில் எப்போதாவது திடீர் என ஒரு சென்சேஷன் உருவாகும். அப்படி ஒரு சென்சேஷன் தான் ப்ரதீப் ரங்கநாதன்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த கோமாளி படம் மெகா ஹிட் ஆனது, அடுத்து இவர் இயக்கி நடித்த லவ் டுடே-வும் மெகா ஹிட் ஆனது.
வசூல்
இதை தொடர்ந்து அஸ்வந்த் இயக்கத்தில் இவர் நடித்த டிராகன் படம் தற்போது வசூல் வேட்டை ஆடி வருகின்றது.
இப்படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 140 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
தற்போது தமிழகத்திலும் இப்படம் ரூ 80 கோடியை நெருங்கிவிட்டதாம், இன்னும் ஒரு வாரத்தில் விடா முயற்சி தமிழக வசூலையும் முந்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.