நடிகை சமந்தா விவாகரத்துக்கு பிறகு மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அதற்கு சிகிச்சை ஒருபுறம், மனஅமைதிக்காக ஆன்மீகத்தில் ஈடுபாடு இன்னொரு புறம் என அவர் இருந்து வருகிறார்.
இந்நிலையில் சமந்தா மீண்டும் சினிமாவில் பிசியாக நடிக்க தயாராகி வரும் நிலையில் அவர் மீண்டும் காதலில் விழுந்திருப்பதாகவும் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.
இயக்குனர் Raj Nidimoru என்பவர் உடன் தான் சமந்தா பற்றிய கிசுகிசு வந்துகொண்டிருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு அவர்கள் ஜோடியாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டில்களும் வைரல் ஆகி இருந்தது.
மீண்டும் ஒன்றாக இருக்கும் போட்டோ
இந்நிலையில் தற்போது மீண்டும் சமந்தா மற்றும் ராஜ் நிடிமொரு ஆகிய இருவரும் ஒன்றாக நண்பரின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்துகொண்டு இருக்கின்றனர்.
அந்த புகைப்படமும் தற்போது வைரல் ஆகி கொண்டிருக்கிறது.